டிரம்பின் ஜெருசலம் முடிவின் மீதான ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம்
December 19 , 2017 2532 days 857 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று பிரகடனப்படுத்தினார். இந்த அங்கீகாரத்தை பின்வாங்கச் செய்வதற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ (தடுப்பு) அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தியுள்ளது.
கடந்த ஆறு வருடங்களில் இது அமெரிக்காவின் முதலாவது வீட்டோ (தடுப்பு) அதிகார பயன்பாடு ஆகும்.
மேலும் இது டிரம்ப் நிர்வாகத்தின் முதலாவது வீட்டோ அதிகார பயன்பாடு ஆகும்.
டிசம்பர் 6-ம் தேதியன்று டிரம்ப் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரமென்றும், அமெரிக்கத் தூதரகம் டெல் அவிவ் என்ற நகரிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றப்படும் என்று அறிவித்து போராட்டங்களையும் வலுவான கண்டனத் தீர்மானங்களையும் தூண்டி விட்டார்.