TNPSC Thervupettagam

டிராகன் ஆளில்லா வான்வழி விமானங்கள்

October 19 , 2024 35 days 81 0
  • ரஷ்யா-உக்ரைன் போரில் ஒரு கொடிய புதிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • டிராகன் ஆளில்லா விமானங்கள் ஆனது அலுமினியம் மற்றும் இரும்பு ஆக்சைடு கலவையான தெர்மைட் என்ற பொருளை வீசின.
  • தெர்மைட் பற்ற வைக்கப்படும் போது, ​​​​ அதனை அணைப்பதற்கு மிகவும் கடினமான ஒரு தானாக நீடிக்கின்ற வினையை (எரிதலை) தூண்டுகிறது.
  • இது உடைகள் மற்றும் மரங்கள் முதல் இராணுவ தர வாகனங்கள் வரை சகல அனைத்தையும் எரித்து அழிக்கக் கூடியது என்பதோடு நீருக்கடியில் உள்ளவற்றை கூட எரிக்கக் கூடியது.
  • முதலாம் உலகப் போரின் போது, ​​ஜெர்மனி நாட்டின் செப்பெலின்ஸ் என்பது தெர்மைட் நிறைந்த குண்டுகளை வீசியது.
  • இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகள் ஜெர்மனி மீது 4-பவுண்டு எடையுள்ள 30 மில்லியன் தெர்மைட் குண்டுகளையும், ஜப்பான் மீது 10 மில்லியன் குண்டுகளையும் வீசின.
  • போர்களில் தெர்மைட் பயன்படுத்துவது சர்வதேசச் சட்டத்தின் கீழ் இன்னமும் தடை செய்யப்பட வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்