TNPSC Thervupettagam

டிராகன் கேப்சூல் குழு

March 4 , 2019 2094 days 608 0
  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆளில்லா கேப்சூல் குழுவுடன் பால்கன் 9-ஐ விண்ணில் செலுத்தியது.
  • ஆளில்லா டிராகன் குழு விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்தினுடன் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையம்
  • சர்வதேச விண்வெளி நிலையம் (ISS - International Space Station) என்பது புவியின் தாழ் வட்டப் பாதையில் செயற்கையான வகையில் அமைக்கப்பட்ட குடியிருக்கக் கூடிய ஒரு செயற்கைக் கோளாகும்.
  • இதன் முதல் பகுதி 1998 ஆம் ஆண்டில் விண்வெளி வட்டப் பாதையில் செலுத்தப்பட்டது. தற்போது புவியின் தாழ் வட்டப்பாதையில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய அமைப்பு ISS ஆகும்.
  • இது ராஸ்காஸ்மாஸ் (ரஷ்யா), நாசா (அமெரிக்கா), ஜக்சா (ஜப்பான்), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ஐரோப்பா) மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் (கனடா) ஆகிய 5 விண்வெளி நிலையங்களுக்கிடையேயான கூட்டுத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்