TNPSC Thervupettagam

டிராக்டர்கள் கொள்முதலுக்கு நிதியளிக்க எஸ்கார்ட்ஸ் நிறுவனத்துடன் பாரத ஸ்டேட் வங்கி கைகோர்ப்பு

October 26 , 2017 2634 days 960 0
  • நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை மற்றும் கடனளிப்பு வங்கியான பாரதஸ்டேட் வங்கி, விவசாயிகள் எஸ்கார்ட்ஸ் டிராக்டர்கள் வாங்குவதற்கு நிதியளிக்க எஸ்கார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • சந்தைகளை ஊக்குவிப்பது மற்றும் அணுகத்தக்க முறையில் அமைப்பது, எஸ்கார்ட்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட பவர்டிராக் (Power Trac) மற்றும் (Farmtrac) ஃபார்ம்டிராக் டிராக்டர்களை வாங்க விரும்பும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு போட்டித்தன்மை கொண்ட வட்டி விகிதங்களில் உயர்ந்த அம்சங்களுடன் கூடிய ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிய வசதிகளை அளிப்பது ஆகியன எஸ்கார்ட்ஸ் உடனான கூட்டு ஒப்பந்தத்தின் நோக்கங்களாகும்.
  • எஸ்கார்ட்ஸ் ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாத்தின் ஒரு முன்னணி டிராக்டர் மற்றும் கட்டுமானக் கருவி தயாரிப்பு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்