தென்னிந்தியாவில் இருந்து ஒரு புதிய வகை குக்கூ (கொள்ளையடிக்கும்) என்ற குளவி இனத்தினை ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்துள்ளது.
குக்கூ குளவியின் இந்தப் புதிய இனத்திற்கு டிரிக்ரைசிஸ் போசிடோனியா என்று பெயரிடப் பட்டுள்ளது.
அதன் மாதிரிகள் தமிழ்நாடு மற்றும் கண்ணூரில் உள்ள மடைப்பாறை ஆகிய இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டன.
மற்றொரு மாதிரி ஆனது நேபாளத்தில் இருந்து பெறப்பட்டது.
இந்தப் பெயர் போஸிடான் எனப்படும் கிரேக்கச் சமுத்திரக் கடவுளின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
இந்த குளவிகள் க்ரைசிடிடே குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும்.
குயில் பறவையைப் போன்றே மற்ற குளவிகள் மற்றும் தேனீக்களிடமிருந்து க்ளெப்டோபராசிடிக் (மற்ற இனங்களிடமிருந்து உணவைத் திருடிப் பெறுதல்) என்ற நடவடிக்கையின் மூலம் உணவைப் பெறுவதால் இவை குக்கூ குளவிகள் என்றும் அழைக்கப் படுகின்றன.
க்ரைசிடிடே குடும்பத்தினைச் சேர்ந்த இனங்கள் சூடான பகுதிகளில் அதிக அளவில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவை என்பதோடு அவை சூரிய ஒளி நாட்டம் அதிகம் கொண்டவையாகவும் (சூரிய ஒளியில் மிகவும் சுறுசுறுப்பாக) இருக்கும்.
மடைப்பாறையின் துருக்கல் மண்ணால் ஆன பீடபூமி அதன் வளமான பல்லுயிரியலுக்கு நன்கு புகழ்பெற்றதாகும் என்பதோடு, இது இந்தக் குளவிகள் நன்கு வாழ்வதற்கு ஏற்ற ஒரு பகுதியுமாகும்.