TNPSC Thervupettagam

டீசல் மகிழுந்துகள் நிறுத்தம்

April 30 , 2019 1908 days 598 0
  • நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியானது டீசல் வாகனத் தயாரிப்பை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அன்று நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய பாரத் – VI உமிழ்வு விதிமுறைகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • பாரத் நிலை உமிழ்வுத் தரங்களானது இந்திய அரசால் உருவாக்கப்பட்ட உமிழ்வுத் தரங்களாகும்.
  • இந்தியாவில் உமிழ்வு விதிமுறைகளின் வரலாறு பின்வருமாறு.
பாரத் நிலை VI
  • தற்பொழுதுள்ள பாரத் நிலை IV (BS-IV) மற்றும் BS-VI எரிசக்தி விதிமுறைகள் ஆகியவற்றின் தரங்களிடையே காணப்படும் முக்கிய வேறுபாடானது அவற்றில் உள்ள சல்பராகும்.
  • BS-VI எரிபொருளானது 80 சதவிகித அளவிற்கு, தற்பொழுதுள்ள 50 ppm நிலையிலிருந்து 10 ppm என்ற நிலைக்கு, சல்பரைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் உமிழ்வானது டீசல் மகிழுந்துகளில் 70 சதவிகிதம் என்ற அளவிற்கும் பெட்ரோல் மகிழுந்துகளில் 25 சதவிகிதம் என்ற அளவிற்கும் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்