2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வலசை போகும் மற்றும் உள்நாட்டுப் பறவைகளின் எண்ணிக்கையினை விட சமீபத்திய, 3வது வருடாந்திர டீபோர் பீல் குளிர்காலப் பறவைகள் (2025) கணக்கெடுப்பில் அதன் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
டீபோர் பீல் என்பது அசாம் மாநிலத்தில் உள்ள காம்ரூப் என்ற மாவட்டத்தில் உள்ள கௌஹாத்தியின் புறநகரில் அமைந்துள்ள ஒரு வற்றாத நன்னீர் ஏரியாகும்.
இது 2002 ஆம் ஆண்டில் ராம்சர் தளமாகவும், 2004 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமானப் பறவை மற்றும் பல்லுயிர்ப் பெருக்க பகுதி (IBA) ஆகவும் அங்கீகரிக்கப்பட்டது.