இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிற்சேர்க்கை ஒன்றில் (annexure) இந்தியாவும் ஓமனும் கையெழுத்திட்டுள்ளன.
இராணுவ பயன்பாடு மற்றும் பண்டகப் போக்குவரத்திற்கு உதவுவதற்காக ஓமனின் முக்கிய துறைமுகமான டுக்கும் (Duqm port) துறைமுகத்தின் அணுகலை இந்தியா இதன் மூலம் உறுதி செய்து கொண்டுள்ளது.
இது இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் தன் நிலைப்பாட்டை (அல்லது) சுவட்டை (Footprint) விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நகர்வாகும்.
இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செயல்பாடுகள் மற்றும் செல்வாக்கை எதிர்ப்பதற்கான இந்தியாவின் கடல்சார் உத்திகளின் (Maritime Strategy) ஒரு பகுதியாகும்.
டுக்கும் துறைமுகமானது ஈரானின் சாபஹார் மற்றும் பாகிஸ்தானின் குவாதார் துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது.
பாகிஸ்தானின் குவாதார் துறைமுகமானது சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (China Pakistan Economic Corridor) ஒரு பகுதியாக பாகிஸ்தானில் சீனாவால் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
செசெல்ஸ் நாட்டில் இந்தியாவினால் மேம்படுத்தப்பட்டு வரும் அஸம்சன் தீவு (Assumption Island) மற்றும் மொரிஸியஸ் நாட்டின் அகாலேகா தீவுடன் (Agalega Island) இணைந்து டுக்கும் துறைமுகமும் இந்தியாவின் செயல்திறன் வாய்ந்த கடல்சார் பாதுகாப்பு வழித்தடத்தில் (proactive maritime security roadmap) அமைந்துள்ளது.
மேலும் இத்துறைமுகமானது சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றையும் கொண்டுள்ளது. இதில் இந்திய நிறுவனங்களினால் 1.8 மில்லியன் டாலர் அளவிற்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.