டூர்னோய் உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்
May 14 , 2018 2535 days 848 0
ஐஸ்லாந்து நாட்டின் ரேய்க்ஜாவிக்கில் (Reykjavik) நடைபெற்ற டூர்னோய் உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் (Tournoi World Cup Satellite Fencing Championship) சாப்ரே பிரிவில் (sabre event) இந்தியாவைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான A. பவானி தேவி வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான (fencer) C.A. பவானி தேவி இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அலெக்ஸிஸ் பிரவுனேவிடம் (Alexis Browne) வெற்றியைத் தவறவிட்டதன் மூலம் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
2017-ஆம் ஆண்டு ஐஸ்லாந்தின் ரேய்க்ஜாவிக்கில் நடைபெற்ற வாள்வீச்சு போட்டியில் பவானி தேவி தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச வாள்வீச்சு போட்டியில் (international fencing event) தங்கப் பதக்கத்தினை வென்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை பவானி அடைந்துள்ளார்.