தில்லி அரசானது “10 ஹாப்டே 10 பஜே 10 மினிட்” என்ற பெயர் கொண்ட டெங்கு மற்றும் இதர நோய்ப் பரப்பிகளின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது தில்லி மக்கள் தங்களது கைபேசியின் மூலம், 10 உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை அழைத்து டெங்குவைத் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்க வழிவகை செய்கின்றது.
நோய்ப் பரப்பியின் மூலம் பரவும் நோய்களுக்கான தேசியக் கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட “இந்தியாவில் டெங்கு” என்ற ஒரு அறிக்கையின் படி, 2019 ஆம் ஆண்டில் டெங்கு பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.