இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகமானது “டென்சிங் நார்கே அட்வென்ச்சர் விருது (TNNAA)” என அழைக்கப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய சாகச விருதினை அறிவித்தது.
இந்த விருதானது நில சாகசம், நீர் சாகசம், விமான சாகசம் மற்றும் வாழ்நாள் சாதனை ஆகிய நான்கு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளானது, சாகசத் துறைகளில் சாதனை படைத்தவர்களைப் பாராட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
இந்த விருதானது மக்கள் தங்களது தாங்குதிறனை மேம்படுத்துதல், சவால் நிலைகளை ஏற்றல், கூட்டுறவு குழுப்பணி மற்றும் விரைந்து செயல்படுதல் போன்ற திறன்களை வளர்க்க ஊக்குவிக்கிறது.