இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றார்.
சிங்கப்பூரின் தேசிய ஆர்கிட் தோட்டத்திற்கு (National Orchid Garden of Singapore) அவருடைய வருகையைக் குறிக்கும் விதமாக அங்குள்ள ஓர் ஆர்கிட் தாவரத்திற்கு இந்தியப் பிரதமரான நரேந்திர மோடியின் பெயர் கொண்டு டென்டிரோபிரியம் நரேந்திர மோடி (Dendrobrium Narendra Modi) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் மோடி சிங்கப்பூரின் மிகவும் பழமையான இந்து கோயிலான ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கும் சென்றுள்ளார்.
இக்கோயிலானது 1827 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
தென்னிந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்களினால் அவர்களின் வழிபாட்டிற்காக சிங்கப்பூரில் இக்கோயில் கட்டப்பட்டது.
சைனாடவுனின் (Chinatown) மையப்பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது.