டென்மார்க்கின் ஓடென்சில் நடைபெற்ற டென்மார்க் ஓபன் போட்டியில் பஞ்சாப்பைச் சேர்ந்த சர்வதேச பாரா பூப்பந்தாட்ட வீரரான சஞ்சீவ் குமார் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் ஆகியவற்றை வென்றுள்ளார்.
இவர் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லுகா ஒல்கியாடி என்பவரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இவர் பிரேசிலின் மார்சிலோ ஆல்வீஸ் என்பவருடன் இணைந்து இஸ்ரேலைச் சேர்ந்த அமிர் வெவி மற்றும் மோசா ஆகியோரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.