TNPSC Thervupettagam

"டெரர் பீஸ்ட்ஸ்" புழுக்களின் புதைபடிவங்கள்

April 19 , 2024 218 days 268 0
  • அறிவியலாளர்கள் முன்னதாக அறியப்படாத, விலங்குகளை வேட்டையாடி உண்ணும் ஒரு புழு இனத்தின் புதைபடிவங்களை கண்டறிந்துள்ளனர்.
  • வடக்கு கிரீன்லாந்தின் முற்கால கேம்ப்ரியன் சிரியஸ் பாஸ்செட் புதைபடிவம் கண்டறியப் பட்ட பகுதியில் இந்தப் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இலத்தீன் மொழியில் ‘பயங்கரமான விலங்கு' என்று பொருள்படுகின்ற டைமோரெ பெஸ்டியா என்று இதற்குப் பெயரிடப்பட்டது.
  • இந்தப் பெரிய உயிரினங்கள் 518 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதியில் வசித்த முற்கால மாமிச உண்ணி விலங்குகளில் சிலவற்றைக் குறிக்கிறது.
  • இந்த கண்டுபிடிப்பு ஆனது முன்னர் அறியப்படாத, வேட்டையாடி உண்ணும் இனங்கள் குறித்த தகவல்களை வழங்குகிறது.
  • துடுப்புகளுடன் கூடிய டெரர் பீஸ்ட்ஸ் (30 செ.மீ.), நீண்ட உணர் இழைகளுடன் கூடிய ஒரு தனித்துவமான தலையையும், அதன் வாயினுள் மிகவும் வலிமையான தாடை அமைப்புகளையும் கொண்டிருந்தது.
  • மகத்தான நீச்சல் திறனுடன் கூடிய இந்த அம்சங்கள், சுமார் அரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முற்கால கேம்ப்ரியன் சகாப்தத்தில் மிகப்பெரிய வேட்டையாடி இனங்களில் ஒன்றாக இவை திகழக் காரணமாயிருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்