TNPSC Thervupettagam

டெராஹெர்ட்ஸ் சேதத் தடுப்பு குறியீடுகள்

April 13 , 2024 97 days 202 0
  • மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் டெராஹெர்ட்ஸ் அலைகளைப் பயன்படுத்தித் தங்களின் சேதத் தடுப்பு குறியீடுகளின் புதிய பல் செயலாக்கத்தினை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த சிறியக் குறியீடு ஆனது RFIDகளை விட மிக கணிசமான அளவில் சிறியது மற்றும் மலிவானது ஆகும்.
  • இது ஒரு பொருளின் குறியீட்டினை ஒட்டியிருக்கும் பசையில் நுண்ணிய உலோகத் துகள்களை இணைப்பதன் மூலம் ஒரு பெரிய பாதிப்பை நிவர்த்தி செய்யும்.
  • டெராஹெர்ட்ஸ் அலைகள், பொருளின் மேற்பரப்பில் இந்தத் துகள்களால் உருவாகும் தனித்துவமான வடிவத்தைக் கண்டறியப் பயன்படுகிறது என்பதோடு, இது தனது மேற் பரப்பில் கைரேகை போன்ற அங்கீகார அமைப்பை உருவாக்குகிறது.
  • இந்தப் புதிய சேதத் தடுப்புக் குறியீடு ஆனது, இவை அகற்றப்பட்டு, போலியான பொருளுடன் மீண்டும் இணைக்கப்படும் போது, அங்கீகரிப்பு முறையை சேதப்படுத்தி, போலிப் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்கிறது.
  • உலோகத் துகள்களானவை டெராஹெர்ட்ஸ் அலைகளுக்கான ஒரு கண்ணாடியாகச் செயல்படுகின்றன என்பதோடு பசையினால் நிரப்பப்பட்ட ஒரு இடைமுகத்துடன் அது இணங்கியவுடன் நகலெடுக்க முடியாத ஒரு தனித்துவமானப் பிரதிபலிப்பு வடிவத்தை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்