சட்டமன்றத் தேர்தலில் 70 இடங்களில் 48 இடங்களைக் கைபற்றியதன் மூலம் 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பா.ஜ.க டெல்லியில் வெற்றி பெற்று உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி (AAP) ஆனது 22 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக தோல்வியடைந்தது.
மதியா மஹால் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஆலே முகமது இக்பால் 42,724 வாக்குகள் வித்தியாசத்தில் அதிக வெற்றியைப் பெற்றார்.
பாஜக கட்சியின் வேட்பாளர் சந்தன் குமார் சௌத்ரி என்பவர், சங்கம் விஹார் என்ற தொகுதியில் மிகவும் குறைந்தபட்சமாக 344 வாக்குகள் என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பிப்ரவரி 05 ஆம் தேதி முடிவடைந்த இந்தத் தேர்தலில் ஒட்டு மொத்தமாக 60.39% அளவு வாக்குகள் பதிவானது.
அதிகபட்ச வாக்குப்பதிவு ஆனது முஸ்தபாபாத்தில் (69%) பதிவானது.
கரோல் பாக் தொகுதியில் மிகக் குறைந்தபட்ச வாக்குகள் (47.40%) பதிவானது.
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, டெல்லி மற்றும் அதை ஒட்டிய அனைத்து மாநிலங்களிலும் பாஜக இப்போது ஆட்சியைக் கொண்டிருக்கும்.