இரு பிரிவினரிடையேயான இரு தரப்பு பேச்சுவார்த்தை (Sectoral Dialogue) துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை கொண்டாடுவதற்காக இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பிற்கு இடையேயான நினைவு மாநாடு டெல்லி நடைபெற்றது.
இந்தியா-ஆசியானுக்கிடையேயான பேச்சுவார்த்தை உறவுகளின் 25-வது நினைவு ஆண்டின் கருத்துரு “பகிரப்பட்ட மதிப்புகள் ; பொது இலக்கு“ (Shared Values ; Common destiny) என்பதாகும் .
இரு தரப்பு நிதியியல் ஆதரவு, இராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு போன்ற பல்வேறு தலைப்புகளின் மீது கவனம் செலுத்தப்பட்டு முழுமையான மாநாட்டுடன் கூடிய கருத்தரங்கு நடத்தப்பட்டு இந்தியா மற்றும் ஆசியான் ஆகியவை கூட்டிணைந்து “டெல்லி பிரகடனம்“ (Delhi declaration) எனும் கூட்டறிக்கையை வெளியிட்டன.
டெல்லி பிரகடனமானது நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கான விரிவான அணுகுமுறையை வலியுறுத்துவதோடு, பயங்கரவாத எதிர்ப்பிற்கு பொதுவான அணுகுமுறையை ஏற்படுத்துவதற்கு ஆதரவும் வழங்குகின்றது.
ஆள்கடத்தல்கள், சட்டவிரோத போதை மருந்து கடத்தல், சைபர் குற்றங்கள் போன்றவை உட்பட பல்வேறு எல்லை தாண்டிய குற்றங்களின் கையாளுதலில் இந்தியா மற்றும் ஆசியானிற்கிடையே உள்ள கூட்டிணைவையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கு இந்த பிரகடனம் அழைப்பு விடுத்துள்ளது.
கடல் சார் சட்டங்கள் மீதான ஐ.நா-வின் உடன்படிக்கைக்கு (UNCLOS-United National Convention on Law of Sea) ஏற்ப, இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல் சார் பாதுகாப்பு, நிலைத்தன்மை, அமைதி போன்றவை மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்ட வேண்டியதற்கான முக்கியத்துவமும் டெல்லி பிரகடனத்தில் மறு உறுதிப்படுத்தப்பட்டது.