DDX, வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் (Ministry of External Affairs - MEA) வளரும் நாடுகளின் ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு முறையுடன் (Research and Information System for Developing Countries - RIS) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதுதில்லியில் ஜனவரி, 2018-ல் நடைபெற்ற ஆசியான் - இந்தியா நினைவு உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட முதல் சிறப்பான நிகழ்வு இதுவாகும்.
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சபை (Association of Southeast Asian Nations - ASEAN) ஆகியவற்றிற்கிடையேயான அரசியல் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக-பண்பாட்டு தொடர்புகளை விவாதிப்பதற்கான முதன்மையான வருடாந்திர நிகழ்வு இந்த டெல்லி பேச்சுவார்த்தை ஆகும்.
2009-லிருந்து இது வருடாந்திர நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது.
இப்பேச்சுவார்த்தையின் 9வது பதிப்பின் கருத்துரு, “ஆசியான் - இந்தியா உறவுகள் : அடுத்த 25 வருடங்களுக்கான கோர்வைகளைப் பட்டியலிடுதல்”
இது ஆசியான் - இந்தியா கூட்டுறவின் 25வது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.