- டெல்லி மற்றும் தேசியத் தலைநகர்ப் பகுதியில் காற்று மாசு அளவு அபாயகரமான அளவிற்கு அதிகரித்துள்ளது.
- தடிமனான புகை மூட்டத்தினால் காணும் நிலை (Visibility) கணிசமாகக் குறைந்து காணப் பட்டது.
- காற்றின் தரக் குறியீடு (Air Quality Index - AQI) பல இடங்களில் 'மிகக் கடுமையான’ வகையைச் சேர்ந்ததாக இருந்தது.
- சில இடங்களில் இது 625 ஆக உயர்ந்தது.
காற்றின் தரக் குறியீடு பின்வருமாறு கருதப் படுகிறது
- 0-50 'நல்லது',
- 51-100 'திருப்திகரமாக',
- 101-200 'மிதமானதாக',
- 201-300 ‘மோசமான’,
- 301-400 'மிகவும் மோசமான’, மற்றும்
- 401-500 'கடுமையானது'.
- 500க்கு மேல் உள்ள எதுவும் 'மிகக் கடுமையான அவசரநிலை' என்ற பிரிவின் கீழ் வரும்.
அதிக மாசுபாடு
- காற்றின் தரக் குறியீட்டின் ‘கடுமையான பிரிவில்’ (400) உள்ள நாட்டின் மிக மாசுபட்ட முதல் 10 இடங்களில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆறு நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும்.
- 24 மணி நேரங்களுக்கு (நவம்பர் 3 ஆம் தேதி மாலை 4 மணி முதல் நவம்பர் 4 ஆம் தேதி மாலை 4 மணி வரை) கணக்கிடப்பட்ட சராசரி AQIயானது ஆய்வு செய்யப்பட்ட 97 நகரங்களில் ஹரியானாவில் உள்ள ஜிந்த் என்னுமிடத்தில் அதிக நச்சுக் காற்று இருப்பதாகக் காட்டியது.
- மொத்தம் 15 நகரங்களில் சராசரியாக 400க்கும் மேல் AQI இருந்தது.
- இந்நகரங்களில் டெல்லியைத் தவிர ஒன்பது நகரங்கள் உத்தரப் பிரதேசத்திலும் ஐந்து நகரங்கள் ஹரியானாவிலும் உள்ளன.
- ஜிந்த் என்ற இடத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள எட்டு நகரங்கள் மிகவும் நச்சுத் தன்மையுள்ள காற்றின் தரம் கொண்டதாகக் காணப் பட்டன.
- 'நல்ல' காற்றின் தரம் கொண்ட நகரங்கள் இந்தியாவில் நான்கு மட்டுமே உள்ளன. அவற்றில் இரண்டு நகரங்கள் கேரளாவில் உள்ளன.
- கேரளாவின் கொச்சியில் உள்ள புறநகர்ப் பகுதியான எலூரில் AQI அளவானது 25 என்ற அளவில் சிறந்த காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளது.
- எலூரைத் தொடர்ந்து மும்பை அருகே தானே (AQI 45), கேரளாவில் திருவனந்தபுரம் (AQI 49), ராஜஸ்தானில் கோட்டா (AQI 50) ஆகியவை சிறந்த காற்றின் தரத்தைக் கொண்டுள்ளன.
மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
- விவசாய நிலங்களில் தாளடிகளை எரிக்கும் முறையை ஒழிக்க வேண்டும் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- நீண்ட காலமாக மாசுபடுவதைத் தடுக்க மத்திய அரசு, தில்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசாங்கங்கள் ஆகியவற்றிடமிருந்து தீர்விற்கான ஒரு வழிகாட்டுதலையும் நீதிமன்றம் கோரியுள்ளது.
வகைப்படுத்தப்பட்ட பதிலெதிர்ப்பு செயல் திட்டம் (GRAP)
- இது 2016 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டு, அதே ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப் பட்டது.
- இத்திட்டம் இயல்பாகவே படிப்படியான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளதால் காற்றின் தரம் மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்கு மாறும் போது, பட்டியலிடப்பட்ட நடவடிக்கைகள் சில அப்போது பின்பற்றப்பட வேண்டும்.
- காற்றின் தரம் கடுமையான நிலையை அடைந்தால், பள்ளிகளை மூடுவது மற்றும் ஒற்றைப்படை- இரட்டைப் படை வாகன எண் பங்கீட்டு முறையைச் செயல்படுத்துவது பற்றி GRAP குறிப்பிட்டுள்ளது.
- தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 வெவ்வேறு அரசு அமைப்புகளிடையேயான நடவடிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு இந்தத் திட்டத்திற்குத் தேவைப் படுகின்றது.