TNPSC Thervupettagam

டெல்லி மெட்ரோ – மெஜெந்தா வழிப் பாதை

December 27 , 2017 2553 days 869 0
  • டெல்லி மெட்ரோவின் மெஜந்தா வழிப்பாதையின் (Megenta line) முதல் பிரிவை நொய்டாவில் பிரதமர் துவங்கி வைத்தார்.
  • டெல்லியின் தாவரவியல் பூங்காவையும், கல்கஜ் மன்தீரையும் இணைக்கும் இந்த 12.64 கி.மீ. நீளமுடைய பாதையானது அடுத்த ஆண்டு ஜானக்புரி வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.
  • இந்தியாவில் முதல்முறையாக, டெல்லியின் இந்த மெஜந்தா இரயில் வழிப்பாதையில் ஓட்டுநர் இல்லாத (driverless) மெட்ரோ இரயில்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நடைமேடையை அடைந்த பின் மட்டுமே திறக்கும் வகையிலான தானியங்கி நடைமேடை  கதவுகளும் (PSD Platform Screen doors) இந்த இரயில் மூலம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • தொலைத்தொடர்பு அடிப்படையிலான இரயில் கட்டுப்பாட்டு சமிக்ஞை தொழிற்நுட்பம் கொண்டதாக இந்த ரயில் இருப்பதால் ஓட்டுநர் இல்லாமல் இவற்றால் 90 முதல் 100 விநாடிகளுக்கான அதிர்வெண்ணிற்குள் இயங்க இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்