TNPSC Thervupettagam

டெல்லியில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை

August 11 , 2017 2717 days 1063 0
  • 50 மைக்ரான் அளவுக்குக் குறைவான நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதற்கு டெல்லி முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவினைத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal - NGT) பிறப்பித்து இருக்கிறது.
  • தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை வைத்து இருப்போரிடம் 5000 ருபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது .
  • மேலும் பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டும் காய்கறி மற்றும் மாமிச வியாபாரிகளிடம் 10,000 ருபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று இந்த உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
  • தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்
  • தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் 18-10-2010 அன்று, தேசியப் பசுமைத் தீர்ப்பாயச்சட்டம் 2010 இன் கீழ் நிறுவப்பட்டது.
  • சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த வழக்குகளைத் தெளிவாக விசாரித்து , விரைந்து முடிப்பதற்காக இந்தத் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது.
  • வனங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பினைச் சட்டப்படி உறுதி செய்வதும்; அத்தகைய வளங்களை முன்னேற்றப் பணிகளுக்காக உபயோகிக்கும் பொழுது இழப்பைச் சந்திப்பவர்களுக்குத் தகுந்த இழப்பீடு கிடைக்க வழிவகைச் செய்வதும் இந்தத் தீர்பாயத்தின் முக்கியப் பணிகள் ஆகும்.
  • இந்தத் தீர்பாயத்தின் முதன்மை அமர்வாக புதுதில்லி இருக்கிறது. இதன் கிளை அமர்வுகளாக போபால் , புனே , கொல்கத்தா மற்றும் சென்னை ஆகியவை விளங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்