TNPSC Thervupettagam

டெஸர்ட் ஃபிளாக் VIII - பயிற்சி

March 10 , 2023 628 days 304 0
  • ஐக்கிய அரபு அமீரகமானது, 3 வார கால அளவிலான டெஸர்ட் ஃபிளாக் VIII என்ற பயிற்சியினை நடத்துகிறது.
  • இது ஐக்கிய அரபு அமீரகம், பிரான்சு, குவைத், ஆஸ்திரேலியா, ஐக்கியப் பேரரசு, பஹ்ரைன், மொராக்கோ, ஸ்பெயின், கொரியக் குடியரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் பலதரப்பு வான்படைப் பயிற்சியாகும்.
  • இது பல்வேறு போர் விமானச் செயல்பாடுகளின் இயங்குந்தன்மை மற்றும் பல்வேறு விமானப்படைகளின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய விமானப் படையானது இந்தப் பயிற்சியில் 5 LCA தேஜாஸ் விமானங்களுடனும், 2 C-17 க்ளோப்மாஸ்டர் III விமானங்களுடனும் பங்கேற்க உள்ளது.
  • இந்தியாவிற்கு வெளியில் ஒரு சர்வதேச விமானப் படைப் பயிற்சியில் LCA தேஜாஸ் வகை விமானங்கள் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்