சமீபத்தில் தேசிய வனவிலங்கு வாரியமானது (NBWL - National Board for Wild Life) அசாமில் உள்ள டெஹிங் பட்காய் யானைகள் காப்பகத்தின் ஒரு பகுதியில் ஒரு நிலக்கரிச் சுரங்கத்தை அமைக்கப் பரிந்துரைத்துள்ளது.
NBWL ஆனது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
இது வனவிலங்குகள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் ஆய்வு செய்வதற்காகவும் தேசியப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களிலும் (பாதுகாக்கப்பட்ட பகுதிகள்) அதனைச் சுற்றிலும் அமைக்கப் படும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காகவும் தொடங்கப் பட்ட ஒரு தலைமை அமைப்பாகும்.
இது பிரதமரால் தலைமை தாங்கப் படுகின்றது.
இது ஆண்டிற்கு ஒரு முறை கூடும் வகையில் 47 உறுப்பினர்களை (ஒரு தலைவர் உள்பட) கொண்ட ஒரு வாரியமாகும்.