TNPSC Thervupettagam
May 22 , 2019 1895 days 582 0
  • இராணுவம், காவல் துறை மற்றும் குடிமக்களைச் சேர்ந்த 119 நபர்களில் இந்திய அமைதிப் படை வீரரான இந்திய காவற்துறை அதிகாரி ஜித்தேந்தர் குமார் என்பவர் இந்த ஆண்டின் டேக் ஹமார்ஸ்க்ஜோல்டு விருது வழங்கி கௌரவிக்கப் படவிருக்கின்றார்.
  • இது பணியின் போது துணிவுடனும் தியாகத்துடனும் பணியாற்றிச் சேவை செய்பவர்களுக்கு வழங்கப்படும் ஐ.நா.வின் ஒரு உயரிய விருதாகும்.
  • இவர் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடைபெற்ற போரில் ஐ.நா.வின் அமைதி நிலைப்படுத்துதல் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது உயிரிழந்தார்.
  • 1997 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இந்த விருதானது ஐக்கிய நாடுகளின் இரண்டாவது பொதுச் செயலாளரான டேக் ஹமார்க்ஸ்ஜோல்டு என்பவரின் நினைவாக வழங்கப்படுகின்றது.
  • இவர் 1961 ஆம் ஆண்டில் காங்கோ போரின் சமயத்தில் போர் நிறுத்தப் பேச்சு வார்த்தைக்காகச் செல்லும் போது ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார்.
இந்திய அமைதிப் படைத் திட்டங்கள்
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்