TNPSC Thervupettagam

டேபிள் டென்னிஸ் - ஷரத் கமல்

March 10 , 2025 21 days 79 0
  • இந்தியாவின் புகழ்பெற்ற டேபிள் டென்னிஸ் வீரரான அச்சந்தா ஷரத் கமல், தொழில் முறை டேபிள் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • ஐந்து முறை ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவரும், இந்தியாவின் மிகவும் உயர்ந்தத் தர வரிசையில் உள்ள டேபிள் டென்னிஸ் வீரர், 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகத் தர வரிசையில் 42வது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • தேசிய ஒற்றையர் சாம்பியன்சிப் போட்டிகளில்ல் 10 முறைகள் பட்டம் பெற்ற இவர் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர்களுள் ஒருவராக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
  • அவர் ஐந்து போட்டிகளில் மொத்தமாக 13 பதக்கங்களைப் பெற்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டு பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி உட்பட நான்கு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்