TNPSC Thervupettagam

டைஃப்ளோபெரிபாட்டஸ் வில்லியம்சோனி

April 16 , 2025 3 days 31 0
  • ஆராய்ச்சியாளர்கள், மிக நீண்ட காலமாக காணாமல் போன வெல்வெட் புழுக்களின் (ஃபைலம் ஓனிகோஃபோரா) இனத்தினைச் சுமார் 111 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது உலகின் பழமையான உயிர் வாழும் புதைபடிவங்களில் ஒன்றாகும்.
  • டைஃப்ளோபெரிபேட்டஸ் வில்லியம்சோனி என்று பெயரிடப்பட்ட இந்தப் பண்டைய கால இனம் ஆனது சுமார் 220 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • ஓனிகோஃபோரா என்பது மிகவும் பழமையான ஒரு குழுவாகும் என்பதோடு இது 350 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
  • இந்த இனத்தில் தற்போது இரண்டு குடும்பங்கள் மட்டுமே உள்ளன என்பதோடு இவை இரண்டிலும் 200க்கும் மிகாத எண்ணிக்கையிலான இனங்களே உள்ளன.
  • டி. வில்லியம்சோனியின் மூலக்கூறுத் தரவு ஆனது, தெற்காசிய ஓனிகோஃபோராக்கள் அவற்றின் நியோட்ரோபிகல் (மெக்ஸிகோ மற்றும் கரீபியனின் தெற்குப் பகுதிகள் உட்பட மத்திய மற்றும் தென் அமெரிக்கா) பகுதியிலிருந்து பிரிந்ததைக் குறிக்கிறது.
  • இது சுமார் 237 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க இனத்தின் ஒரே சார்பு நிலை இனமாகும்.
  • ஆசிய ஓனிகோஃபோராவுக்கு என்று ஆஸ்திரேலிய ஓனிகோஃபோராக்களில் எந்தச் சார்பு நிலை இனங்களும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்