ஹீண்டாய் மோட்டார் குழுமமானது நடக்கும் மகிழுந்துவின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.
இது “மாற்றம் பெற்ற நுண்ணறிவு கொண்ட நிலத்தின் மீதான பயண இயந்திரம்”என்ற விரிவாக்கத்தைக் கொண்ட “டைகர்” (TIGER - Transforming Intelligent Ground Excursion Robot) என்று அழைக்கப் படுகின்றது.
இந்த இயந்திரமானது சவாலான நிலப் பகுதியில் பயணம் செய்யும் திறன் கொண்ட சக்கரங்களைக் கொண்டுள்ளது.
அதி செயல்திறன் கொண்ட இந்த இயக்க வாகனமானது நிலை குலைந்தாலோ அல்லது கடினமான நிலப் பகுதியில் பயணம் செய்யத் தேவைப்பட்டாலோ, அதில் நடக்கும் திறன் கொண்டு விளங்குகின்றது.
இதனை ஆளில்லா விமானத்துடன் இணைக்கப்பட முடியும்.
அவசரக் காலங்களில் சரக்குகளை விநியோகம் செய்யவும் வேண்டி இதனைப் பயன்படுத்த முடியும்.
பூமியில் மட்டுமல்லாது இதரக் கோள்களிலும் இதனைப் பயன்படுத்த முடியும்.