சுகோய் - 30 எம்கேஐ போர் விமானங்களின் 222 என்ற படைப் பிரிவானது இந்திய விமானப் படையால் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் விமானப் படைத் தளத்தில் இணைக்கப் பட்டது.
இந்தப் படைப் பிரிவிற்கு " டைகர்ஷார்க்ஸ்" என்று பெயரிடப் பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழ்நாட்டில் இணைக்கப்பட்ட படைப் பிரிவுடன் சேர்த்து இதுவரையில் இந்தியாவில் தற்பொழுது 12 “டைகர்ஷார்க்ஸ்” படைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தப் படையானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் வேகமாக விரிவடைந்து வரும் உத்திசார் ஆதிக்கத்தைக் கண்காணிப்பதற்காக தமிழகத்தில் சேர்க்கப் பட்டுள்ளது.
சீனா தனது முதலாவது இராணுவத் தளத்தை / அயல்நாட்டு இராணுவ உதவித் தளத்தை “ஆப்பிரிக்காவின் கொம்பு” என்று அழைக்கப்படும் பகுதியைச் சுற்றியுள்ள ட்ஜிபூட்டியில் (Djibouti) நிறுவியுள்ளது.