November 20 , 2024
5 days
59
- பெரும்பாலும் டைட்டன் ஆரம் என சுருக்கிக் கூறப்படுகின்ற அமோர்போபால்லஸ் டைட்டனம் ஆனது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னின் தெற்குப் பகுதியில் பூத்து உள்ளது.
- ஒரு தசாப்தத்திற்கு ஒருமுறை என்று பூக்கும் இது உலகின் மிகப்பெரிய மலர்களில் (10 அடிக்கு மேலான உயரம் வளரும்) ஒன்றாகும்.
- இந்தப் பூ ஆனது அழுகிய இறந்த உடல்கள் போன்ற மணத்தைக் கொண்டுள்ளன.
- இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவைத் தாயகமாகக் கொண்ட இது 'பிண மலர்' என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த மலர் குறித்து இத்தாலிய தாவரவியலாளர் ஓடோர்டோ பெக்காரி என்பவரால் 1878 ஆம் ஆண்டில் முதன்முதலில் விவரிக்கப்பட்டது.
- இந்த மலர் ஆனது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் "அருகி வரும்" இனம் ஆக பட்டியலிடப் பட்டுள்ளது.
Post Views:
59