TNPSC Thervupettagam

டைட்டானிக் II

November 13 , 2018 2202 days 744 0
  • 1912-ம் ஆண்டின் RMS டைட்டானிக் கப்பலின் நவீன பிரதியான டைட்டானிக் II ஆனது 2022ல் தனது பயணத்தைத் தொடங்கவுள்ளது.
  • இந்த கப்பல் பயணத்திற்கான திட்டமானது முதலில் ஏப்ரல் 2012ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மில்லியனரான கிளீவ் பால்மர் மற்றும் அவரது கப்பல் நிறுவனமான புளு ஸ்டார் லைன் குரூஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.
  • இது சீனாவில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான கப்பல் கட்டும் நிறுவனமான CSC ஜின்லிங்க் ஷிப்யார்ட் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.
  • இந்தக் கப்பலானது முதலில் துபாயில் இருந்து சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து) வரையில் தனது முதல் பயணத்தை இரண்டுவார கால அளவிற்கு மேற்கொள்ளும். அதன் பிறகு தனது உண்மையான இலக்கான நியூயார்க்கை நோக்கி பயணம் மேற்கொள்ளும்.
  • முதல் RMS டைட்டானிக் கப்பலானது 1912ம் ஆண்டு ஏப்ரலில் வட அட்லாண்டிக் பெருங்கடலில் தனது முதல் பயணத்தின் போது பனிப்பாறையில் மோதி மூழ்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்