TNPSC Thervupettagam

டைனோசர்களின் புதை படிமங்கள் – அர்ஜென்டினா

March 11 , 2021 1230 days 582 0
  • ஆராய்ச்சியாளர்கள் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
  • டைனோசரின் முழுமையடையாத பகுதியளவு கிடைத்த எலும்புக்கூடு ஆனது அர்ஜென்டினாவில் உள்ள நியூகென் நகரத்தின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.
  • இந்தப் புதை படிமங்கள் “நிஞ்சாடைட்டன் சபாடாய்” எனப் பெயரிடப்பட்ட டைனோசர் இனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளர்.
  • இவர்கள் நிஞ்சாடைட்டனை ஒரு டைட்டனோசராக (Titanosaur) அடையாளம் கண்டுள்ளனர்.
  • டைட்டனோசர்கள் என்பது 4 தூண்கள் போன்ற கால்களைக் கொண்டு நடக்கும் வகையிலான, நீளமான கழுத்து கொண்ட, தாவரங்களை உண்ணும் டைனோசர்களின் மிகப்பரந்த ஒரு வகையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்