டைப்பாய்டு காய்ச்சலுக்கு எதிரான டைப்பார் TCV என்றழைக்கப்படும் டைப்பாய்டு இணைத் தடுப்பூசிக்கு (Typhoid Conjugate Vaccine) உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து முன்தகுதிச் (Pre-qualification) சான்று கிடைத்துள்ளது.
ஹைதராபாத்திலுள்ள பாரத உயிர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தால் இத்தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
டைப்பார் TCV தடுப்பூசியானது முதல் டைப்பாய்டு தடுப்பூசியாகும். 6 வயது முதலான குழந்தைகள் முதல் வயது வந்தோர் வரையிலானவர்களுக்கு இத்தடுப்பூசியைப் பயன்படுத்திட மருத்துவ ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இது டைப்பாய்டு காய்ச்சலுக்கு எதிராக நீடித்த பாதுகாப்பை அளிக்க வல்லது.
WHO விடம் இருந்து முன்-தகுதி சான்றைப் பெற்றுள்ளதன் மூலம் இத்தடுப்பூசிகளின் கொள்முதல் மற்றும் விநியோகத்தை யுனிசெப், அகில அமெரிக்க ஆரோக்கிய அமைப்பு மற்றும் GAVI (Global Alliance for Vaccines and Immunization) தடுப்பூசி கூட்டணியால் ஆதரிக்கப்படும் நாடுகளிடம் மேற்கொள்ள இயலும்.
சல்மோனெல்லா டைபி (Salmonella Typhi) எனும் பாக்டீரியத்தால் டைப்பாய்டு காய்ச்சல் உண்டாகின்றது.