TNPSC Thervupettagam

டைமெத்தில் ஈதர் எரிபொருள் டிராக்டர்

July 2 , 2023 387 days 229 0
  • ஐஐடி கான்பூரில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் முதல் 100% டைமிதில் ஈதர் (DME)-எரிபொருள் மூலம்  இயங்கும் டிராக்டர்/வாகனத்தை உருவாக்கியுள்ளனர்.
  • இது நிலையான மாற்று எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்து அமைப்பை நோக்கிய ஒரு குறிப்பிடத் தக்க நடவடிக்கையைக் குறிக்கிறது.
  • டைமெத்தில் ஈதர் (DME) என்பது புதுப்பிக்கத்தக்க மற்றும் சுத்தமான/தூய்மையான எரியும் வகையிலான ஒரு மாற்று எரிபொருளாகும்.
  • இது போக்குவரத்து உட்பட பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தப் படலாம்.
  • சாதாரண வளிமண்டல நிலையில், DME ஒரு நிறமற்ற வாயுவாகும்.
  • இயற்கை எரிவாயு, நிலக்கரி, பயோமாஸ் அல்லது புதுப்பிக்கத்தக்க மூலங்களில் இருந்து ஒரு தொகுப்புச் செயல்முறை மூலம் இது உற்பத்தி செய்யப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்