2018-ஆம் ஆண்டின் 100 மிகவும் செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியலை (100 Most Influential People List of 2018) டைம்ஸ் இதழ் (TIME Magazine) வெளியிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டிற்கான 100 மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் சுய உழைப்பினால் உயர்ந்த நான்கு இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அவர்களாவன-
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் - விராட்கோலி
ஓலா (Ola) நிறுவனத்தின் துணை நிறுவனர் - பாவிஷ் அகர்வால்
மைக்ரேசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி - சத்ய நாதெள்ளா.
பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன்
பாலியல் கொடூரர்களுக்கு (sexual predators) எதிராக போராடும் “Me too” எனும் இயக்கத்தின் (Me Too movement) நிறுவனரான தரானா பர்கேவுடைய (Tarana Burke) பெயரும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெயரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்க விண்வெளி வீராங்கனையான (Astronaut) பெக்கி வின்ஸ்டன் (Peggy Whitson) பெயரும் இந்த ஆண்டிற்கான டைம்ஸ் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவர் அண்மையில் விண்வெளியில் தன்னுடைய 665-வது தினத்தை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பட்டியலில் இங்கிலாந்து இளவரசரான ஹாரியின் பெயரும் அவருடைய வருங்கால மனைவியான மேகன் மார்க்லே பெயரும் இடம் பெற்றுள்ளது.
செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் விளையாட்டுத் துறையில், க்ளோ கிம் (Chloe Kim) பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் பனிச்சறுக்கு விளையாட்டில் பல்வேறு உலகச் சாதனைகளை முறியடித்து வரும் பனிச்சறுக்கு வீராங்கனையாவார்.