TNPSC Thervupettagam

டைம்ஸ் இதழின் ஆசிய உயர் கல்வி தரவரிசை 2025

April 28 , 2025 18 hrs 0 min 36 0
  • சிங்குவா பல்கலைக்கழகம் மற்றும் பீக்கிங் பல்கலைக்கழகம் ஆகியவை முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்ததுடன், இந்தத் தரவரிசையில் சீனா முதலிடத்தினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள ஐந்து நிறுவனங்கள் சீனாவைச் சேர்ந்தவை ஆகும்.
  • சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆனது மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
  • இந்த ஆண்டிற்கானத் தரவரிசையில் 35 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 853 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்தத் தரவரிசையில் உஸ்பெகிஸ்தான், பஹ்ரைன், மங்கோலியா மற்றும் சிரியா ஆகிய நான்கு நாடுகள் முதல் முறையாக இடம் பெற்றுள்ளன.
  • இந்தியாவிலிருந்து, இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (IISc) 38வது இடத்தைப் பிடித்து, இப்பட்டியலில் முன்னணி இடத்தில் உள்ள இந்திய நிறுவனமாகத் தொடர்கிறது.
  • 111வது இடத்தைப் பிடித்த அண்ணா பல்கலைக்கழகம் இப்பட்டியலில் இடம் பெற்று உள்ள இரண்டாவது முன்னணி இந்திய நிறுவனம் ஆகும்.
  • சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனம் 149வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்