டைம்ஸ் உயர் கல்வி (THE) தாக்கங்கள் குறித்த தரவரிசை 2023
June 9 , 2023 410 days 246 0
2023 ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர் கல்வி (THE) தாக்கம் குறித்தத் தரவரிசையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா விஸ்வ வித்யபீடமானது இந்தியாவின் மிகச் சிறந்தப் பல்கலைக் கழகமாக உருவெடுத்துள்ளது.
உலகளவில் 112 நாடுகள் / பிராந்தியங்களைச் சேர்ந்த 1,591 பல்கலைக் கழகங்களில் இந்தப் பல்கலைக்கழகமானது 52வதாக தரவரிசைப் படுத்தப்பட்டு உள்ளது.
முதல் 300 இடங்களில் உள்ள மற்ற இந்தியப் பல்கலைக்கழகங்களில் பஞ்சாபில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக் கழகம் 101 மற்றும் 200 ஆகியவற்றுக்கு இடையில் தர வரிசைப் படுத்தப்பட்டு உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஷூலினி பயோடெக்னாலஜி மற்றும் மேலாண்மை அறிவியல் பல்கலைக் கழகமானது 101 மற்றும் 200 ஆகியவற்றுக்கு இடையில் தர வரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
ஒடிசாவில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி என்ற பல்கலைக் கழகமானது 201 முதல் 300 ஆகியவற்றுக்கு இடையில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
ஐந்தாவது நீடித்த மேம்பாட்டு இலக்கான (SDG-5) பாலினச் சமத்துவத்தைப் பேணும் கல்வி நிறுவனங்களில் மணிபால் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் 4வது இடத்தில் உள்ளது.
SDGயின் 7வது இலக்கான மலிவு மற்றும் சுத்தமான எரிசக்திப் பிரிவில் முதல் 100 இடங்களில் இந்தியாவில் இருந்து அதிக அளவாக 5 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
SDGயின் 3வது இலக்கான நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுப் பிரிவில் முதல் 100 இடங்களில் இந்தியாவில் உள்ள மூன்று பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.