TNPSC Thervupettagam

டைம்ஸ் உயர் கல்வி (THE) தாக்கங்கள் குறித்த தரவரிசை 2023

June 9 , 2023 410 days 243 0
  • 2023 ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர் கல்வி (THE) தாக்கம் குறித்தத் தரவரிசையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா விஸ்வ வித்யபீடமானது இந்தியாவின் மிகச் சிறந்தப் பல்கலைக் கழகமாக உருவெடுத்துள்ளது.
  • உலகளவில் 112 நாடுகள் / பிராந்தியங்களைச் சேர்ந்த 1,591 பல்கலைக் கழகங்களில் இந்தப் பல்கலைக்கழகமானது 52வதாக தரவரிசைப் படுத்தப்பட்டு உள்ளது.
  • முதல் 300 இடங்களில் உள்ள மற்ற இந்தியப் பல்கலைக்கழகங்களில் பஞ்சாபில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக் கழகம் 101 மற்றும் 200 ஆகியவற்றுக்கு இடையில் தர வரிசைப் படுத்தப்பட்டு உள்ளது.
  • இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஷூலினி பயோடெக்னாலஜி மற்றும் மேலாண்மை அறிவியல் பல்கலைக் கழகமானது  101 மற்றும் 200 ஆகியவற்றுக்கு இடையில் தர வரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • ஒடிசாவில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி என்ற  பல்கலைக் கழகமானது  201 முதல் 300 ஆகியவற்றுக்கு இடையில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • ஐந்தாவது நீடித்த மேம்பாட்டு இலக்கான (SDG-5) பாலினச் சமத்துவத்தைப் பேணும் கல்வி நிறுவனங்களில் மணிபால் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் 4வது இடத்தில் உள்ளது.
  • SDGயின் 7வது இலக்கான மலிவு மற்றும் சுத்தமான எரிசக்திப் பிரிவில் முதல் 100 இடங்களில் இந்தியாவில் இருந்து அதிக அளவாக 5 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
  • SDGயின் 3வது இலக்கான நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுப் பிரிவில் முதல் 100 இடங்களில் இந்தியாவில் உள்ள மூன்று பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்