டைம்ஸ் உயர் கல்வியின் (THE) உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசை 2019
September 28 , 2018 2251 days 637 0
பெங்களுரின் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Scince - IISc) ஆனது 2019 இன் டைம்ஸ் உயர் கல்வி (THE - Times Higher Education) உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக (251-30 வரிசையில்) முதலிடத்தில் உள்ளது.
ஐஐடி-இந்தூர் (Indian Institute of Technology - IIT) ஆனது (351-400) நாட்டின் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது இந்த பல்கலைக்கழகத்தை உலகளாவிய சிறந்த 400 பல்கலைகழகங்களின் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து IIT மும்பை மற்றும் IIT ரூர்கி ஆகியவற்றுடன் கர்நாடகாவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரீஸ்வரா பல்கலைக்கழகமும் சேர்ந்து நாட்டின் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த தரவரிசையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தையும் கேம்பிரிட்ஜ் இரண்டாவது இடத்தையும், ஸ்டான்போர்டு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமானது ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
பட்டியலில் இடம் பிடித்த இந்திய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை கடந்த
ஆண்டின் 42லிருந்து இந்த ஆண்டு 49 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா 5 வது மிகச்சிறந்த பிரதிநிதித்துவ நாடாக அமைந்தது.