டைம்ஸ் உயர்கல்வி இதழின் உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2023
October 18 , 2022 770 days 428 0
டைம்ஸ் உயர் கல்வி (THE) இதழின் 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
கல்வி (30%), ஆராய்ச்சி (30%), பாராட்டுகள் (30%), சர்வதேசக் கண்ணோட்டம் (7.5%) மற்றும் தொழில்துறை விளைவு (2.5%) ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனங்கள் தர வரிசைப் படுத்தப் படுகின்றன.
கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில், ஒரு நன்மதிப்புக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொன்றிற்கும் 15% மதிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தரவரிசையில் இடம் பெற்ற 75 பல்கலைக்கழகங்களுடன் 2023 ஆம் ஆண்டிற்கான தர வரிசையில் இந்தியா ஆறாவது அதிகப் பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக திகழ்கிறது.
இந்தியக் கல்வி நிறுவனங்களில் இந்திய அறிவியல் கழகம் (IISc) முதலிடத்தில் உள்ளது.
உலகளவில், இந்திய அறிவியல் கழகம் (IISc) 251-300 என்ற குழுவில் இடம் பெற்றுள்ளது.
இந்திய நிறுவனங்களில் இரண்டாவது இடத்தை இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷூலினி உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் (மொத்தம் 351-400) பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் இரண்டாவது முன்னணி இந்திய நிறுவனமாக இருந்த ரோபார் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமானது 6வது இடத்திற்குச் சரிந்தது.
இதில் தமிழ்நாட்டின் அழகப்பா பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றது.