TNPSC Thervupettagam

டைம்ஸ் உயர்கல்வி தரவரிசை

June 4 , 2018 2370 days 684 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் உயர்கல்வி உலக மதிப்பு தரவரிசையில் (Times Higher Education's World Reputation Rankings 2018) முதல் 100 பல்கலைக்கழகங்களுள் பெங்களூருவின் இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science-IISc) இடம் பிடித்துள்ளது.
  • இவ்வாண்டிற்கான புகழ்மிக்க பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே இந்திய கல்வி நிறுவனம் இதுவேயாகும்.

  • இந்தப் பட்டியலில் பெங்களுருவின் இந்திய அறிவியல் நிறுவனமானது 91-100 தரவரிசைகளுக்குள்ளாக ஓர் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களான ஹார்வர்டு (Harvard), மாசசூட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (Massachusetts Institute of Technology -MIT), ஸ்டான்போர்டு (Stanford) மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) ஆகிய பல்கலைக்கழகங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.
  • 2011 ஆம் ஆண்டிலிருந்து தற்போது முதன் முறையாக இந்தியா இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்