மிகவும் மேம்பட்ட எடை குறைப்பு மருந்துகளில் ஒன்றான மௌஞ்சாரோ, அமெரிக்க மருந்தக நிறுவனமான எலி லில்லியால் இந்தியாவில் விற்கப்பட உள்ளது.
மௌஞ்சாரோவில் டைர்செபடைடு எனப்படும் ஒரு தீவிர மூலக்கூறு உள்ளது.
இது இரத்தத்தில் சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் இன்சுலின் சுரப்பை மிகவும் நன்கு மேம்படுத்துவதற்காக வேண்டி, குளுகோகனின் சுரப்பைத் தடுக்கும், சில குடல் ஹார்மோன்களின் செயல்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் குறைத்து எடை குறைப்பை மேம்படுத்த குளுகோகன் போன்ற பெப்டைட்-1 (GLP-1) மற்றும் குளுக்கோஸ் சார்ந்த இன்சுலினோ ட்ரோபிக் பாலிபெப்டைட் (GIP) ஆகிய இரண்டு ஹார்மோன்களைப் பிரதிபலிக்கிறது.
டைர்செபடைடு ஆனது, சரியான உணவைப் பின்பற்றினாலும் மற்ற சில மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்த முடியாத இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்துவதற்காக உருவாக்கப் பட்டது.