TNPSC Thervupettagam
March 9 , 2024 114 days 199 0
  • சுற்றுச்சூழல் சார்ந்த சாதனைக்கான 2024 ஆம் ஆண்டு டைலர் பரிசு ஜோஹன் ராக்ஸ்ட்ரோம்  என்பவருக்கு வழங்கப்பட உள்ளது.
  • இது கோள்களின் எல்லைக் கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தின் உருவாக்கத்திற்கு அவர் ஆற்றிய அற்புதமானப் பங்களிப்புகளையும் முன்னோடியான பணிகளையும் அங்கீகரிக்கிறது.
  • ராக்ஸ்ட்ரோம், போட்ஸ்டாம் பருவநிலை தாக்க ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் (PIK) இயக்குநராகவும், புவி ஆணையத்தின் இணைத் தலைவராகவும் உள்ளார்.
  • கிரக எல்லைகள் என்பது பல்புவி அமைப்பு அறிவியல் துறைகளில் மேற்கொள்ளப் படும் சர்வதேச ஒத்துழைப்பாகும்.
  • இந்தக் கோட்பாடு ஒன்பது புவி அமைப்புகளுக்கு வரையறுக்கப்பட்ட எல்லைகளை வரையறுக்கிறது.
  • உயிரினங்களைப் பாதுகாப்பதில் அவற்றின் நிலைத்தன்மை மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றின் அதீத முக்கியத்துவத்தை இவை வலியுறுத்துகின்றன.
  • மதிப்புமிக்க டைலர் பரிசு ஆனது, சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு என்று அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்