TNPSC Thervupettagam

டொனால்ட் டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் – அமெரிக்க அவை

December 21 , 2019 1708 days 496 0
  • அமெரிக்க அவையால் (மக்கள் பிரதிநிதித்துவச் சபை) குற்றம் சாட்டப்பட்டு, பதவி நீக்கத்திற்குப் பரிந்துரைக்கப்படும் மூன்றாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.
  • 2020 தேர்தலுக்கு முன்னர் தனது அரசியல் போட்டியாளரை விசாரிக்க வெளிநாட்டு அரசாங்கத்தை அணுகியதற்காக இவர் மீது குற்றம் சாட்டப் பட்டது.
  • தற்சமயம் செனட் (மேல்சபை) சபையில் இவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும். இவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு அச்சபையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறுவது அவசியமாகும்.
  • இதுவரை இரண்டு அமெரிக்க அதிபர்கள் (பில் கிளிண்டன் & ஆண்ட்ரூ ஜான்சன்) மட்டுமே குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் செனட் சபையால் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்