TNPSC Thervupettagam

டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ் ஒத்தி வைப்பு

March 26 , 2020 1579 days 543 0
  • அதிகாரப்பூர்வமாக XXXII ஒலிம்பியாட் மற்றும் பொதுவாக டோக்கியோ 2020 என அழைக்கப்படும் 2020 கோடைக்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள் 2021 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப் படுகின்றன.
  • இதைச் சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஜப்பானின் டோக்கியோ விளையாட்டு ஏற்பாட்டுக் குழு இணைந்து அறிவித்தன.
  • இந்த விளையாட்டுகள் ஒத்தி வைக்கப் பட்டிருந்தாலும்  அவை இன்னும் டோக்கியோ 2020 என்றே அடையாளப் படுத்தப்பட்டு மற்றும் சந்தைப் படுத்தப்படும்.

ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளின் வரலாறு

  • இதுவரை திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதலாம் உலகப் போர் (1916 பெர்லினில்) அல்லது இரண்டாம் உலகப் போர் (1940 டோக்கியோவில் மற்றும் 1944 லண்டனில்) காரணமாகவே  ரத்து செய்யப் பட்டுள்ளன.
  • குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (ஜப்பானில் 1940 மற்றும் இத்தாலியில் 1944) இரண்டாம் உலகப் போரின் காரணமாக ரத்து செய்யப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்