இப்போட்டிகள் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று தொடங்கி செப்டம்பர் 05 வரை நடத்தப் படுகின்றன.
இந்தப் போட்டிகளுக்கான அதிகாரப் பூர்வச் சின்னம் ஆனது ‘Someity’ என்பதாகும்.
இதில் ஏழு பேர் ஆடும் கால்பந்தாட்டத்திற்குப் பதிலாக முதல்முறையாக அலைச் சறுக்கு மற்றும் பாட்மிண்டன் மற்றும் டேக்வாண்டோ ஆகியவை அறிமுகப் படுத்தப் பட உள்ளன.
2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா தனது மிகப் பெரிய அணியினைக் களமிறக்க உள்ளது.
9 விளையாட்டுத் துறைகளைச்சேர்ந்த 54 தடகள வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
2016 ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் 19 இந்திய வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
ஈட்டி எறியும் வீரர் தேவேந்திர ஜஜாரியா (ரியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றார்) மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இரண்டு பாராலிம்பிக் சாம்பியன்கள் ஆவர்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளிப் படகு செலுத்தும் போட்டியாளராக (Paracanoe) பிராச்சி யாதவ் பங்கேற்க உள்ளார்.
அவனி லேகரா, பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க உள்ள முதல் இந்திய பாரா துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஆவார்.
இப்போட்டிகளுக்குத் தேர்வான முதல் ஆடவர் வில்வித்தை வீரர்கள் ஹர்விந்தர் சிங் மற்றும் விவேக் சிகாரா ஆகியோர் ஆவர்.
அனுராக் தாக்கூர் மற்றும் நிசித் பிரமானிக் ஆகியோர் பாராலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான ‘கர் தே கமால் தூ’ எனும் பாடலை வெளியிட்டனர்.
இந்தப் பாடலை சஞ்சீவ் சிங் எனும் திவ்யாங் கிரிக்கெட் வீரர் இசையமைத்துப் பாடி உள்ளார்.