இந்த சர்வதேசப் பல்விளையாட்டு நிகழ்வுகள் ஜப்பானிலுள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 08 வரை நடத்தப் பட்டன.
டோக்கியோ 1964 (கோடைகாலம்), சப்போரோ 1972 (குளிர்காலம்) மற்றும் நகானோ 1998 (குளிர்காலம்) போட்டிகளை நடத்தியதற்குப் பிறகு ஜப்பான் நாடு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது நான்காவது முறையாகும்.
இது தவிர, கோடைகாலப் போட்டிகளை இரண்டு முறை நடத்தும் முதல் ஆசிய நகரம் டோக்கியோ ஆகும்.
113 பதக்கங்களுடன் ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் உள்ளிட்ட 7 பதக்கங்களை இந்தப் போட்டியில் இந்திய அணியினால் வெல்ல முடிந்தது.
இந்திய நாடானது மொத்தம் 86 நாடுகள் அடங்கிய பதக்கப் பட்டியலில் 48வது இடத்தில் உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இது மிக உயரிய தரநிலை ஆகும்.
வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியக் கொடியைச் சுமந்து அணியை வழி நடத்தினார்.
குறிப்பு
ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணியானது முதன்முறையாக அரையிறுதி வரை அடைந்து வரலாறு படைத்துள்ளது.
கோல்ஃப் போட்டியில் அதிதி அசோக் 4வது இடத்தினைப் பெற்றார்.
படகு செலுத்தும் வீராங்கனை அர்ஜூன் லால் ஜாத் மற்றும் அர்விந்த் சிங் ஆகியோர் ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறிய முதல் இந்திய இரட்டை ஸ்கல்ஸ் இணை (Indian double sculls pair) ஆவர்.
ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வான முதல் இந்திய வாள்வீச்சு வீரர் பவானி தேவி ஆவார்.