ஜூலை 23 அன்று ஜப்பானியப் பேரரசர் நருஹிட்டோ, டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதை அறிவித்தார்.
32வது ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவானது பெருந்தொற்றின் காரணமாக எந்தவொரு பார்வையாளர்களும் இன்றி டோக்கியோவிலுள்ள தேசிய மைதானத்தில் நடைபெற்றது.
ஜப்பான் நாடானது நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது.
இதற்கு முன்பு இரு முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளையும், (சப்போரோ – 1972 மற்றும் நாகானோ – 1998) டோக்கியோவில் 1964 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டியையும் ஜப்பான் நாடு நடத்தியுள்ளது.