டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 – புதிய தகவல்கள்
September 1 , 2021
1182 days
794
- மல்யுத்த வீரராக இருந்து ஈட்டி எறியும் வீரராக மாறிய சுமித் அண்டில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
- F64 என்ற வரம்பில் 68.55 மீ என்ற ஒரு உலக சாதனையின் மூலம் அவர் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
- துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான அவனி லேக்கரா பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றினைப் படைத்துள்ளார்.
- மகளிருக்கான 1 0மீ ஏர் ரைபிள் ஸ்டான்டிங் SH1 போட்டியின் இரண்டாம் சுற்றில் அவர் தங்கம் வென்றார்.
- இவர் மொத்தம் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையையும் புதிய பாராலிம்பிக் சாதனையையும் படைத்துள்ளார்.
- ஆடவருக்கான F56 போட்டியில் வட்டு எறியும் வீரர் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- ஆடவருக்கான F46 ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் தேவேந்திர ஜஜாரியா வெள்ளியும் சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலமும் வென்றனர்.
Post Views:
794