TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 18 , 2017 2717 days 1278 0
  • டோக்லம், (டோங்லாங் என்றும் அழைக்கப்படுகிறது) பூடான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சந்திக்கும் முச்சந்தி (Tri Junction) பகுதி.
  • இந்தப் பகுதி பூடான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமைகோரும் ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாகும்.
  • இந்தியா மற்றும் சீனாவை பிரிக்கும் நாது லா கணவாயில் (Nathu La Pass) இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
  • டோக்லம் பீடபூமி ஆனது சும்பி பள்ளத்தாக்கின் (Chumbi Valley) ஒரு பகுதியாகும். சும்பி பள்ளத்தாக்கின் பெரும்பகுதி திபெத்தில் அமைந்துள்ளது.
  • 1988 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் சீனாவும் பூடானும் இப்பிராந்தியத்தில் சமாதானத்தையும் நிலைப்பாட்டையும் தக்க வைத்துக் கொள்வதாக ஒப்புக் கொண்டன.
  • 2017ஆம் ஆண்டு, டோக்லமின் ஒரு பகுதியில் சீனா சாலை கட்ட முயன்றது. இந்தச் செயல் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே உரசல்களை உண்டாக்கியது. இரு தரப்பும் அச்சுறுத்தல்களை விடுத்ததோடு பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்