மரபியல் வல்லுநர்கள் மற்றும் வளங்காப்பாளர்கள் இணைந்து டோடோ பறவைகளை மொரிஷியஸ் தீவில் இருந்த அவற்றின் சொந்த வாழ்விடத்திற்கு மீண்டும் அறிமுகப் படுத்துவதற்கான முயற்சியில் ஈடுப்ட்டுள்ளனர்.
மொரீஷியஸ் பகுதியில் வாழ்ந்த ஒரு பறவையான டோடோ என்பது கடைசியாக 350 ஆண்டுகளுக்கு முன்பு 1662 ஆம் ஆண்டில் தென்பட்டது.
"dead as a dodo" என்ற சொற்றொடர் ஆங்கில மொழியில், முற்றிலும் அழிந்த ஒன்றைக் குறிக்க பொதுவாகப் பயன்படுத்தப் படுகின்றது.
சுமார் 1 மீட்டர் உயரமும் 10 முதல் 18 கிலோகிராம் வரை எடையும் கொண்டதாக நம்பப் படும் டோடோ பறவையினால் பறக்க முடியாது.